மேசேஜ் லிங்க்கால் வில்லங்கம்... ஆன்லைனில் முதியவர் இழந்த பணத்தை மீட்டுக்கொடுத்த சைபர் கிரைம் போலீசார்

0 1981

கோயம்புத்தூரில் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்த முதியவருக்கு, விரைந்து செயல்பட்டு சைபர் கிரைம் போலீசார் பணத்தை மீட்டுக் கொடுத்தனர்.

துடியலூர் இடிகரை பகுதியைச் சேர்ந்த குமரவேலின் செல்போன் எண்ணுக்கு, வங்கி கணக்கு விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று கடந்த 20-ந்தேதி குறுந்தகவல் வந்துள்ளது. அதனுடன் வந்த இணையதள லிங்கில் தனது வங்கி விபரங்களை அவர் பதிவிட்டபிறகு, வங்கி கணக்கிலிருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 715 ரூபாய் எடுக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்து அவர் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி, ஒரு லட்சத்து 81 ஆயிரம் ரூபாய் பணத்தை மீட்டு கொடுத்தனர்.

ஆன்லைன் மோசடியில் இழந்த பணத்தை மீட்க 1930 எனும் தொலைபேசி எண்ணில் புகார் செய்யலாம் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர். பணத்தை மீட்டதற்கான ஆவண சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பாதிக்கப்பட்டவரிடம் வழங்கினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments