ஈன்ற கன்றுக்குட்டியை பிரிய முடியாமல், உடல் வலியையும் பொருட்படுத்தாமல் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஓடிய தாய் பசு
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் கன்றுக்குட்டி கொண்டு செல்லப்பட்ட மினிலாரியை பின்தொடர்ந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு தாய் பசு ஓடி வந்தது.
வந்தவாசி சண்முகம் தெருவில் பசு மாடு ஒன்று சாலையின் நடுவில் கன்றுக்குட்டியை ஈன்றது. தகவல் அறிந்த மாட்டின் உரிமையாளர் கன்றுக் குட்டியை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். இதைப் பார்த்த தாய் பசு, உடல் வலியை பொருட்படுத்தாமல் லாரியை பின்தொடர்ந்து ஓடி வந்தது.
Comments