வறுமையால் பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவி... படிப்பு செலவை தானே ஏற்பதாக அமைச்சர் காந்தி உறுதி.!
ராணிப்பேட்டை அருகே குடும்ப வறுமையால், பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவியின் வீட்டிற்கு சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணி நூல் துறை அமைச்சர் காந்தி, மாணவியின் படிப்பு செலவை தானே ஏற்பதாக உறுதி அளித்தார்.
புளியங்கண்னு பகுதி குடுகுடுப்பை சமூகத்தை சேர்ந்த மல்லிப்பூ என்ற பெண், கணவர் இறந்து விட்ட நிலையில், சில மாதங்களுக்கு முன் விபத்து ஒன்றில் அவருக்கும் கால் முறிவு ஏற்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார்.
இதனால் இவரின் மகன், மகள் படிப்பை நிறுத்தி விட்டு குடுகுடுப்பை மற்றும் பிளாஸ்டிக் விற்கும் தொழில்களை செய்து வந்தனர். இந்நிலையில் 9-ம் வகுப்புடன் படிப்பை கைவிட்ட மாணவி செல்வி படிக்க விரும்புவதாக செய்திகள் வெளியானது.
மல்லிப்பூவின் வீட்டிற்கு சென்ற ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் , அவருக்கு உதவி தொகை வழங்கவும், அவரின் மகனுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுக்கவும் மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்யும் என உறுதி அளித்தார்.
Comments