பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு சமூக நீதிக்ககு எதிரானது.. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, பாமக எதிர்ப்பு.!
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதராத்தில் பின் தங்கியவர்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பத்து சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சமூக நீதி தீர்ப்புக்கு எதிரானது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்து உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தமது அறிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து உள்ளதோடு, சமூக நீதிக்காக போராடும் ஜனநாயக சக்திகள் இந்த தீ ர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்பு மணி ராமதாஸ், முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது, சமூக நீதிக் கொள்கைகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தி விடும் என்று கண்டனம் தெரிவிவித்து இருக்கிறார்,
Comments