முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு - மு.க.ஸ்டாலின்

0 3234

முன்னேறிய வகுப்பினரில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியான தீர்ப்பு, சமூகநீதியை வென்றெடுப்பதற்கான போராட்டத்தில், ஒரு பின்னடைவு என்று, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தீர்ப்பினை முழுமையாக ஆராய்ந்து, சட்ட வல்லுநர்களோடு கலந்தாலோசித்து, போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மண்ணிலிருந்து, சமூக நீதிக்கான குரல், நாடெங்கும் ஓங்கி ஒலித்திட, ஒத்த கருத்துடைய அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments