நவ.11-ம் தேதி, வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், வரும் 11ஆம் தேதி மிக கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 10ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், வரும் 11ஆம் தேதி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையில் ஓரிரு இடங்களில் இன்று, மிதமான மழை இருக்கும் என தகவல் வெளியிட்டுள்ள வானிலை மையம், தென்மேற்கு வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் எனவும் கணித்துள்ளது.
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும், இது, வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் வானிலை மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Comments