பாலியல் குற்றச்சாட்டில் கைதான இலங்கை வீரர் தனுஷ்கா குணதிலகா இலங்கை அணிக்காக விளையாட தடை..!
பாலியல் வன்கொடுமை புகாரில் கைதாகியுள்ள இலங்கை பேட்ஸ்மேன் தனுஷ்கா குணதிலகா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.
டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான 29 வயது ஆஸ்திரேலிய நாட்டு பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்ததாக, சிட்னி போலீசாரால் தனுஷ்கா குணதிலகா கைது செய்யப்பட்டார்.
31 வயதாகும் குணதிலகாவிற்கு இலங்கை அணியில் இனி இடமில்லை என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது..
Comments