10சதவீதம் இட ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!
முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என, உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்விலுள்ள 5 நீதிபதிகளில், 3 நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
இவ்வழக்கில் முதலில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பெல்லா திரிவேதி, பர்திவாலா ஆகியோர், 10% இட ஒதுக்கீடு வழங்கும் 103ஆவது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செல்லும் என தெரிவித்தனர்.
இந்த இட ஒதுக்கீட்டினால், அரசியல் சாசன அடிப்படை கூறுகள் மீறப்படவில்லை என்றும், சமூக சமத்துவத்திற்கு எதிரானது அல்ல எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆனால், நீதிபதி ரவீந்திர பட் மட்டும், 10% இட ஒதுக்கீட்டிற்கு எதிராக தீர்ப்பு வழங்கினார். தலைமை நீதிபதி யு.யு.லலித்தும், நீதிபதி ரவீந்திர பட்டின் தீர்ப்புடன் தமது பார்வை ஒத்துப்போவதாக குறிப்பிட்டார்.
5 நீதிபதிகளில், 3 நீதிபதிகள் ஆதரவாக தீர்ப்பளித்ததால், முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு உறுதியாகியுள்ளது.
Comments