தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம், சென்னையில் இருந்து இன்று துவங்கியது..!
தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம், சென்னையில் இருந்து இன்று காலை துவங்கியது.
சென்டிரல் ரயில் நிலையத்தில் அந்த ரயிலை தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி ஜி மல்லையா தொடங்கி வைத்தார்.
இந்த ரயில், இன்று மதியம் மைசூர் சென்று விட்டு, மீண்டும் இன்றே சென்னை திரும்புகிறது.
சோதனை ஓட்டத்தை தொடர்ந்து வரும் 11ம் தேதி ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.
Comments