பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது..!

0 3187

சேலம் அருகே பங்கு சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் தருவதாகக் கூறி மருத்துவரிடம் 80 லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மல்லூரைச் சேர்ந்த மருத்துவர் கிருபாகரன் என்பவர்  தனது  வாட்ஸ் அப் எண்ணில் வந்த  தகவலை நம்பி பல்வேறு தவணைகளாக 80 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கு முதற்கட்டமாக  ஒரு லட்சத்து 90 ஆயிரம் வரை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன்பிறகு   எந்த  பணமும் அளிக்கப்படவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து கிருபாகரன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேரளா மற்றும் டெல்லியைச் சேர்ந்த 2பேரை கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments