அமெரிக்க இளைஞர் ஒரு நிமிடத்தில் 1,140 முறை கைத்தட்டி கின்னஸ் சாதனை.!

0 2567

அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒரு நிமிடத்தில் ஆயிரத்து 140 முறை கைத்தட்டி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறார்.

டேவன்போர்ட் பகுதியைச் சேர்ந்த டால்டன் மேயர் என்ற 20 வயதான இளைஞர், ஒரு வினாடிக்கு 19 முறை என, ஒரு நிமிடத்தில் ஆயிரத்து 140 முறை கைத்தட்டி சாதனை படைத்தார்.

ஏற்கனவே படைக்கப்பட்ட சாதனையை 37 கைத்தட்டல்கள் வித்தியாசத்தில் டால்டன் மேயர் முறியடித்த நிலையில், இதற்காக அவர் பயிற்சிகூட செய்ததில்லை என்றதுதான் வியப்புக்குரிய விஷயமாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments