வங்கக்கடலில் வரும் 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
வங்கக்கடலில் வரும் 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிவாரணம் முகாம்களும், மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் இருப்பதாக, தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், நேற்று ஒரே நாளில் கனமழையால் 29 கால்நடைகள் உயிரிழந்ததாகவும், 67 குடிசைகள், வீடுகள் சேதமடைந்ததாகவும், சென்னையில் முறிந்து விழுந்த 65 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டதாகவும், அவசர உதவிக்கு ‘1070’ என்ற எண்ணில் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments