போக்குவரத்து விதிமீறல் - விறுவிறுப்பாக அபராதம் விதிப்பு.. 15 நாட்களில் 30,699 வழக்குகள் பதிவு - ரூ. 1.88 கோடி அபராதம் விதிப்பு..!
சென்னையில் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அமலானபின் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
அதில் 12 ஆயிரத்து 625 வழக்குகளுக்குண்டான அபராத தொகை 70 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டியதாக 8 ஆயிரத்து 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
Comments