இரு தரப்பு மீனவர்களுக்கிடையே தகராறு.. வலையை சேதப்படுத்தியதால் எழுந்த பிரச்சனையில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு..!
நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடற்பரப்பில், பெட்ரோல் மற்றும் நாட்டு வெடிகுண்டு வீசி இரு தரப்பு மீனவர்கள் மோதிலில் ஈடுபட்டது தொடர்பாக 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீனவர்கள், நாட்டுப்படகில் மீன்பிடித்த இடிந்தகரை மீனவர்களின் வலையை சேதப்படுத்தியதாக இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கடலோர காவல்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Comments