கல்வி நிலையங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அனைத்து பள்ளிகளும் மூடல்..!
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கல்வி நிலையங்களை சேர்ந்த 55 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.
அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணமான ஒன்டாரியோவில் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 583 கல்வி நிலையங்களை சேர்ந்த ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபடும் பணியார்களுக்கு நாளொன்றுக்கு 4000 டாலர்கள் அபராதம் விதிக்க அரசு சட்டம் இயற்றிய நிலையிலும், மாகாணம் முழுவதும் ஊழியர்கள் போட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Comments