ஷாருக்கானுக்கு அட்லி சுட்டது சூடான இட்லி அல்ல.. ஆறிப்போன அல்வாப்பா..! தயாரிப்பாளர் பரபரப்பு புகார்

0 18522

விஜயகாந்த் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான பேரரசு திரைப்படத்தை காப்பி அடித்து ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி இந்தியில் ஜவான் என்ற புதிய படத்தை இயக்கிவருவதாகவும், அதற்கான உரிமம் தன்னிடம் இருப்பதாகவும் பிரபல தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் பிலிம் சேம்பரில் புகார் அளித்துள்ளார்.

மோகனின் மவுனராகத்தை, ஆர்யாவுக்கு ராஜாராணியாகவும்.... விஜய்காந்தின் சத்ரியனை, விஜய்க்கு "தெறி"யாகவும்.... கமலின் அபூர்வ சகோதர்களை, விஜய்யே மெர்சலாக்கும் வகையில் சூப்பராக சுட்டு தொடர்ந்து 3 ஹிட்டு கொடுத்தவர் அட்லி..! என விமர்சிக்கபட்டது.

கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக பாலிவுட்டில் மையம் கொண்டுள்ள காப்பி புயல் அட்லி, ஷாருக்கனை நாயகனாக வைத்து ஜவான் என்ற இந்திப்படத்தை இயக்கி வருகின்றார்.

இந்த முறை ஏதாவது ஹாலிவுட் படத்தில் கைவத்திருப்பார் என்று ரசிகர்கள் எல்லாம் ஆவலோடு காத்திருக்க , அவரோ அதே பழைய டெக்னிக்காக விஜயகாந்தின் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான பேரரசு படத்தை காப்பி அடித்து ஷாருக்கானுக்கு இரு வேடங்கள் கொடுத்து இந்தியில் கூத்து கட்டி வருவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து பேரரசு படத்தின் உரிமையை வைத்திருக்கும் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன், பிலிம் சேம்பரிலும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் அட்லி மீது புகார் அளித்துள்ளார்.

வருகிற 9 ந்தேதி இந்த புகார் குறித்து விசாரிக்க இருப்பதாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அட்லி எனது கதையை திருடி விட்டார்... அட்லி எனது படத்தை காப்பி அடித்து விட்டார்... அட்லி எனது படத்தின் சில காட்சிகளை உருவி விட்டார் என்று தமிழகத்தில் நீண்ட நாட்களாக ஒலித்து வந்த ஆதங்க குரல்கள் இனி இந்தியிலும் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கலாம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments