டிவிட்டர் நிறுவனத்தில் ஆட்குறைப்பு.. இந்தியர்கள் பலர் பணிநீக்கம்.. அலுவலகங்கள் மூடப்பட்டதால் சேவைகள் பாதிப்பு!

0 3022

டிவிட்டர் நிறுவனப்பங்குகளை வாங்கிய எலன் மஸ்க், ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

டிவிட்டரின் ஊழியர்களில் 50 சதவீதம் குறைக்கப்போவதாக எலன் மஸ்க் அறிவித்துள்ளார்.இந்நிலையில் இந்தியாவில் உள்ள டிவிட்டரின் மார்க்கெட்டிங், பொறியியல், தொடர்பு அலுவலர்கள் பலர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்று தகவல் இல்லை.அவர்களுக்கு பணி இழப்பீட்டுத் தொகை தரப்பட்டதா என்பது குறித்தும் தெரியவில்லை.ஊழியர்கள் பணி நீக்கம் காரணமாக டிவிட்டர் அலுவலகங்கள் சில இடங்களில் மூடப்பட்டிருந்தன. இதனால் சில பகுதிகளில் டிவிட்டர் சேவை முடங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments