உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர் ராணுவ உதவி - அமெரிக்கா அறிவிப்பு..!

0 2610

உக்ரைன் ராணுவத்தை வலுப்படுத்த மேலும் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஆயிரத்து 100 பீனிக்ஸ் கோஸ்ட் டிரோன்கள், ஆயுதங்கள் மற்றும் பிற உபகரணங்களுக்காக வழங்கப்பட உள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் தாக்‍குதல்களில் உருக்‍குலைந்த உக்‍ரைனுக்‍கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆதரவுக்‍கரம் நீட்டி வருகின்றன. போர் தொடங்கியதில் இருந்து உக்ரைனுக்கு இதுவரை 18.2 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments