சென்னையில் கனமழையால் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலி..!

0 3809

சென்னையில் கனமழையால் நூறாண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

பார்ட் டவுன் தங்கசாலை பகுதியில் ராஜேந்திர தாஸ் என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டின் முதல் தளம் இடிந்து விழுந்ததில் அவ்வழியாக கோவிலுக்கு சென்று கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

மேலும், இடிபாடுகளில் சிக்கி 3 பேர் காயமடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

இதனிடையே, சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சேகர்பாபு, கடந்த 2014-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியால் அபாயகரமான கட்டிடம் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அரசு நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments