விபத்தில் காயமுற்று சாலையோரம் கிடந்த நபருக்கு முதலுதவி அளித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர்

0 4193

செங்கல்பட்டு அருகே விபத்தில் காயமுற்று சாலையோரம் கிடந்த நபருக்கு முதலுதவி அளித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

புதுச்சேரியில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், இருசக்கர வாகன விபத்தில் சிக்கி ஒருவர் காயமடைந்து இருந்ததை கண்டார்.

உடனடியாக காரில் இருந்து இறங்கிய ஆளுநர், அவருக்கு முதலுதவி அளித்தார்.

இதனை தொடர்ந்து, 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளித்து, அருகே உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments