இலவச பாஸ் இருப்பதால் டிக்கெட் எடுக்க மறுத்த மாற்றுத்திறனாளியை இறக்கிவிட்ட நடத்துனர்
திருப்பூரில், அரசு பேருந்திலிருந்து மாற்றுத்திறனாளி மற்றும் அவரது குடும்பத்தினரை கீழே இறக்கிவிட்ட நடத்துனரை, பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து துறை பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.
80 சதவீத பார்வை குறைபாடு உடைய வீரபாண்டி பகுதியை சேர்ந்த சத்யராஜ், குடும்பத்தினருடன் அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.
அவரது மனைவிக்கு, பெண்களுக்கான இலவச பயணம் என்றும், தனக்கும், தனது மகனுக்கும், அரசின் இலவச பாஸ் உள்ளதாகவும் சத்யராஜ் தெரிவித்த நிலையில் மூவரையும் பேருந்திலிருந்து கீழே இறங்க சொன்ன நடத்துனர், வீடியோ எடுத்த சத்யராஜின் மகனை தாக்கியதாக காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நடத்துனர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
Comments