இம்ரான் கானை சுட்ட நபரின் வாக்குமூல வீடியோவை கசியவிட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் சஸ்பெண்ட்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் வாக்குமூல வீடியோ வெளியான விவகாரத்தில், காவல்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற பேரணிக்குள் புகுந்த நபர், துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஒருவர் உயிரிழந்ததோடு இம்ரான் கான் உட்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், இம்ரான் கானை கொலை செய்யவே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அந்த நபர் போலீசாருக்கு அளித்த வாக்குமூல வீடியோ வெளியானது.
அந்த வீடியோவை கசியவிட்டதற்காக காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை சஸ்பெண்ட் செய்து பஞ்சாப் மாகாண முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Comments