"டீ" கடையில் இருந்த சிலிண்டரில் திடீரென பற்றிய "தீ"..!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், தேநீர் கடையில் இருந்த சிலிண்டர் தீப்பற்றி எரிந்த நிலையில், அவ்வழியாக பணிக்கு சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர், சிலிண்டரில் ஏற்பட்ட தீயை அணைத்தார்.
அறந்தாங்கி கட்டுமாவடி சாலையில் உள்ள கடையில், டீ போடுவதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் தீ பற்றியது.
ஈர சாக்கை கொண்டு தீயை கட்டுப்படுத்திய தீயணைப்பு அலுவலர் சந்திரசேகர், அருகிலிருந்த கழிவுநீர் கால்வாயில் சிலிண்டரை போட்டு தீயை முற்றாக அணைத்தார்.
Comments