வணிக அடிப்படையிலான பால் விலை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது - அமைச்சர் நாசர்

0 2798

வணிக அடிப்படையிலான பால் விலை மட்டுமே மாற்றப்பட்டுள்ளது, பொதுமக்கள் பயன்படுத்தும் பால் விலை மாற்றப்படவில்லை என பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் அறிவித்தது போல பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் முதலமைச்சர் குறைத்ததாகவும், அந்நிலையே என்றும் நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

வணிக அடிப்படையிலான ஆரஞ்சு நிற பால் விலையை மட்டுமே அரசு உயர்த்தியிருப்பதாகவும், மற்ற நிற பால் பாக்கெட்டுகளின் விலையை அரசு ஒருபோதும் உயர்த்தாது, என்றும் அவர்கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments