தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

0 8354

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் உட்பட 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments