எலே... பர்னீச்சர்கடையில இப்படியாசெய்வ..? கெட்டபய சிக்கிட்டாம்ல..!

0 10658

கிராமப்புறங்களில் இருந்து இளம் பெண்களை வேலைக்கு வரவழைத்து அத்துமீறலில் ஈடுபட்டு வீடியோ எடுத்து மிரட்டி வந்த பள்ளிக்கரனை பர்னிச்சர் கடை அதிபரை போலீசார் கைது செய்தனர். வீடியோகால் வில்லன் போலீஸ் வலையில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை பள்ளிக்கரனையில் உள்ள குமரன் பர்னிச்சர் நிறுவனத்தின் உரிமையாளர் அருண்குமார். தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரையை சேர்ந்த இவர் தனது பர்னிச்சர் கடையில் விற்பனையாளர் வேலைக்கு என்று ஏழை குடும்பத்து இளம் பெண்களாக பார்த்து சேர்த்துள்ளார். அவர்களிடம் தனது பணசெல்வாக்கை பயன்படுத்தி கடையில் வைத்தே அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அந்த பெண்களை மிரட்டி தினமும் இரவில் தங்கும் விடுதிக்கு சென்ற பின்னரும் வீடியோ காலில் தான் விரும்பும் வகையில் பேசச்சொல்லி தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகின்றது.

உதவிக்கு யாரும் இல்லாததால் அங்கு பணி புரிந்த பெண்கள் பயந்துபோய் இதனை வெளியில் சொல்ல இயலாமல் தவித்து வந்தனர்.

இந்த நிலையில் அங்கு பணிபுரியும் ஒரு பெண் அருண்குமாரின் செல்போனில் தன்னுடன் பணிபுரியும் சில பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அந்த பெண் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

வீடியோவில் இருக்கும் பெண்களை அழைத்து பணம் கொடுத்த அருண்குமார் இது குறித்து வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது. ஒரு கட்டத்தில் தனது செல்போனில் ஆபாச வீடியோக்கள் இருக்கும் தகவலை வெளியிட்ட பெண்ணை காதல் வலையில் வீழ்த்த முயன்றுள்ளார் அருண்குமார். இதையடுத்து அந்தப்பெண் அருண்குமார் தனக்கு கொடுத்த தொல்லைகள் குறித்தும் மற்ற பெண் ஊழியர்களின் ஆபாச வீடியோ விவகாரம் குறித்தும் வீடியோ ஆதாரங்களுடன் பள்ளிக்கரனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வீடியோ ஆதரங்களை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசாரிடம், வீடியோவில் இருக்கும் பெண்களை தனக்கு சாதகமாக பேசுவதற்காக பர்னிச்சர் கடை உரிமையாளர் அருண்குமார் அழைத்து வந்ததாக கூறப்படுகின்றது. போலீசாரின் விசாரணையில் அந்தப்பெண்களும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை புகாராக சொன்னதால், அருண்குமாரை கைது செய்த போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments