காதல் திருமணம் செய்து கொண்ட 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை முயற்சி..!
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 5 மாத கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்த அபிராமி தண்ணீரில் விளையாடிய தன் குழந்தையை அடித்ததால் மாமனார், மாமியார் அவரை திட்டியுள்ளனர்.
இதை அவர் தன் கணவனிடம் தெரிவித்த நிலையில், அவரும் அபிராமியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த அபிராமி தற்கொலைக்கு முயன்றதாக தெரிகிறது.
Comments