29 ஆயிரம் கி.மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும், அழிவை ஏற்படுத்தும் அளவு பெரிய விண்கல்..!
பூமி மீது மோதி பாதிப்பு ஏற்படுத்த கூடிய நூறடி விட்டம் கொண்ட பெரிய விண்கல்லை நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
யூ.என்.5 எனப் பெயரிடப்பட்ட அந்த விண்கல், மணிக்கு 29 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த விஞ்ஞானிகள், இன்று காலை 10 மணி 30 நிமிடத்துக்கு பூமியின் புவி வட்டப் பாதையை 8 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று கூறினர்.
விண்வெளியில் சுற்றித் திரியும் விண்கற்கள் பூமியின் மீது மோதி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க, அந்த விண்கற்கள் மீது விண்வெளியிலேயே மோதி திசைத் திருப்பும் முயற்சியில் நாசா சமீபத்தில் வெற்றி கண்டது.
Comments