டெல்லியில் காற்று மாசு நிலை தீவிரம் - குழந்தைகளுக்கு அதிகளவில் பாதிப்பு ஏற்படும் அபாயம்..!
டெல்லியில் காற்று மாசு மேலும் மோசம் அடைந்துள்ளது. 4ம் கட்ட மாசு நிலைக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றின் மாசு காரணமாக 16 வயதுக்குட்பட்டோருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதனால் பள்ளிகள் திறப்பதைத் தள்ளிப் போடுவது பற்றி டெல்லி அரசு ஆலோசித்து வருகிறது. இதனிடையே டெல்லி நகரில் அத்தியாவசியப் பொருட்கள் தவிர இதர சரக்கு லாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments