"ஆதாரங்களின்றி ஆசிரியர்களை குற்றம் சாட்டக் கூடாது" - சென்னை உயர்நீதிமன்றம்

0 4183

ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரமும் இன்றி ஆசிரியர்களை குற்றம் சாட்டக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கூடலூர் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ராபர்ட், தலை முடியை வெட்டியும், பேண்டை கிழித்தும் துன்புறுத்தியதால் தங்கள் மகன் யுவராஜ் தற்கொலை செய்துகொண்டதாகவும், தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் தாயார் கலா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் விசாரித்தபோது, மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில் தலைமை ஆசிரியர் நடந்து கொண்டதாகவும், அவர் பணியிலிருந்த காலத்தில் தேர்ச்சி சதவீதம் 45 லிருந்து 90 ஆக உயர்ந்ததாகவும்  அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பெற்றோரின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என கூறி மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, மாணவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்கும் ஆசிரியர்களை கண்டித்தால், அவர்கள் அர்ப்பணிப்புடன் கடமையை செய்ய மாட்டார்கள் என்றார். வீட்டிலும், சமூகத்திலும், குழந்தைகளை கண்காணிப்பது பெற்றோரின் கடமை எனவும் அறிவுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments