சுவிட்சர்லாந்தில் பிங்க் நிறத்திலான அரிய வைரம் ஜெனிவாவில் 8-ம் தேதி ஏலம்..!
சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் பிங்க் நிறத்திலான அரிய வைரம் வரும் 8-ம் தேதி ஏலம் விடப்பட உள்ளது.
பிங்க் வைரங்கள் மிகவும் அரிதானவை என்றும், இதற்கு உலகம் முழுவதிலும் உள்ள நகை சேகரிப்பாளர்களிடம் ஆர்வம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
18.18 காரட் எடை கொண்ட இந்த வைரம் 35 மில்லியன் அமெரிக்க டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு கடந்த 2018-ம் ஆண்டு 18.96 காரட் எடை கொண்ட பிங்க் வைரம் 50.4 மில்லியன் டாலருக்கு ஏலம் போனதே இதுவரை ஏலம் போன பிங்க் வைரங்களில் அதிகப்பட்ச விலையாகும்.
Comments