தஞ்சையில் மாமன்னர் ராஜராஜசோழன் 1037-வது சதயவிழா கோலாகலமாக கொண்டாட்டம்..!
உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை கட்டியெழுப்பி, சோழ பேரரசை ஆண்ட மாமன்னர் இராஜராஜ சோழனின் 1037ம் ஆண்டு சதய விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், தருமபுர ஆதீனம் உள்ளிட்டோர் இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னதாக திருமுறை நூல் யானை மீது வைக்கப்பட்டு மங்கள வாத்யங்கள் முழங்க, திருமுறை திருவீதி உலா பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து கோவிலை வந்தடைந்தது.
சதய விழாவை ஒட்டி தஞ்சை மாநகரம் விழாக் கோலம் பூண்ட நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
Comments