தலைநகர் டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரிப்பு..!
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து, காற்று தரக்கட்டுப்பாட்டு குறியீடு 426 என்ற மிகவும் மோசமான அளவை எட்டியுள்ளது.
பக்கத்து மாநிலங்களில் விளைநிலங்களில் எரிக்கப்படும் கழிவுகள், தில்லியில் இயங்கும் வாகனங்களின் புகையினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காற்று மாசினால் குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதால் சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
காற்று மாசின் அளவு குறையும் வரையில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விட முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments