கட்டுமானப் பணியின் போது ஒருபுறம் கால்வாய் இடிந்து விழுந்தது..!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 22 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால், கட்டுமானப் பணியின் போது இடிந்து விழுந்தது.
2-ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவரும் செல்வபெருமாள் நகரில், பெரும்பாலான இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சாலை முழுதும் தோண்டப்பட்ட பள்ளத்தால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் வடிகால் பணியை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
Comments