பெற்ற மகனை கூலிப்படை ஏவி கொலை செய்த பெற்றோர்..!
தெலுங்கானாவில் பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவத்தில், பெற்றோர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சூர்யபேட்டை முசி ஆறு அருகே அடையாளம் தெரியாத ஆணின் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார், உடலை மீட்டு சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை முன்னெடுத்தனர்.
சம்பவத்தன்று அப்பகுதியில் சுற்றித்திரிந்த காரின் பதிவு எண்ணை கொண்டு விசாரித்த போது, கல்லூரி முதல்வர் ராம் சிங்-அவரது மனைவி ராணிபாய் ஆகிய இருவரும் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.
தம்பதியின் மகன் சாய்நாத், , தவறான பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் தகராறில் ஈடுபட்டதால், ராணிபாய் தம்பி ரவி உதவியுடன் கொலை செய்து ஆற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.
Comments