அரசுப்பள்ளி குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த மாணவர்கள் - கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை..!
ஓமலூர் அருகே நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியம் குப்பம்பட்டி அரசுப் பள்ளியில் மாணவர்கள் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வைத்த புகார் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
பள்ளியின் மேற்கூரையில் ஏறி ஆபத்தான முறையில் சுத்தம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, பெற்றோர்கள் கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகாரளித்துள்ளனர்.
நங்கவள்ளி வட்டார கல்வி அலுவலர் தலைமையில் விசாரணை நடத்திய அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
Comments