டி20 உலகக்கோப்பை - 5 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி..!

0 5806
டி20 உலகக்கோப்பை - 5 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தல் வெற்றி..!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் வங்கதேச அணியை, இந்திய அணி போராடி வென்றது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோர் அரை சதம் அடித்தனர்.

பின்னர், வங்கதேச அணி பேட்டிங் செய்தபோது மழை குறுக்கிட்டதால், வெற்றி இலக்கும், ஓவர்களும் குறைக்கப்பட்டன.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, வெற்றி இலக்கான 151 ரன்களை எட்ட இயலாமல் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments