நவம்பர் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு..!

0 5029

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் வட கிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளதாகவும், நவம்பர் 6ஆம் தேதி வரை மாநிலத்தில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments