ஷாருக் கானின் பிறந்த நாளை முன்னிட்டு 'பதான்' டீசர் வெளியீடு..!
நடிகர் ஷாருக்கானின் பிறந்த நாளையொட்டி, அவர் நடிப்பில் உருவாகியுள்ள 'பதான்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள அப்படத்தில் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அதிரடி சண்டைக் காட்சிகள் நிறைந்த அப்படத்தின் டீசர், யூடியூப் தளத்தில் வெளியானது முதல், பல லட்சம் பேர் பார்த்து வருகின்றனர்.
இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 25ஆம் தேதியன்று, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில்
வெளியாகும் என்று, படக்குழு அறிவித்துள்ளது.
Comments