அழகுநிலைய மேற்கூரையை துளையிட்டு ரூ.12 லட்சம் மதிப்புள்ள அழகு சாதனப் பொருட்கள் சேதம் என புகார்
தூத்துக்குடியில் அழகு நிலையத்தில் அத்துமீறி மேற்கூரையை துளையிட்டு உள்ளே நுழைந்த கடை உரிமையாளர் அங்கிருந்த 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அழகு சாதனப் பொருட்களை சேதப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் ஜெயமேரி என்பவர் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
இதனை காலி செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Comments