பூமி சுற்று வட்டப்பாதையில் நுழைந்து, பாதிப்பு ஏற்படுத்த கூடிய மூன்று புதிய விண்கற்கள் கண்டுபிடிப்பு..!
பூமி சுற்று வட்டப்பாதையில் நுழைந்து, மோதி பெரும் பாதிப்பு ஏற்படுத்த கூடிய மூன்று விண்கற்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
தென் அமெரிக்க நாடான சிலியின் செர்ரோ தொலோலோ வட-தென் அமெரிக்க ஆய்வகத்தில் உள்ள பிளான்கோ எனப்படும் 4 மீட்டர் நீளம் கொண்ட தொலை நோக்கியின் கேமிராவை பயன்படுத்தி கண்பிடித்த விஞ்ஞானிகள், பூமி மற்றும் வெள்ளி சுற்றுவட்டப் பாதைகளுக்கு இடையே இருந்த இந்த விண்கற்கள், சூரியனின் ஒளி பிரதிபலிப்பால் கண்டறிவது சவாலான பணியாக இருந்ததாக தெரிவித்தனர்.
Comments