'டாஸ்மாக்' சூப்பர்வைசரிடம் பட்டாக்கத்தியை காட்டி பணத்தை பறிக்க முயற்சி.!

0 3817

கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரிடம் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி கலக்ஷன் பணத்தை பறிக்க முயன்ற இளைஞர்கள் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

வெள்ளிகுப்பம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசரான விஜய் ஆனந்த், கலக்ஷன் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்யசென்றபோது, இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவர் மீது வாகனத்தை மோதுவது போல் செய்து அவரை கீழே விழவைத்துள்ளனர்.

சாலையில் விழுந்தவரிடம் பட்டாக்கத்தியை காட்டி மிரட்டி பணப்பை இருந்த இருசக்கர வாகனத்தை வழிப்பறி செய்ய முயன்றபோது, அவ்வழியாக சென்றவர்கள் திரண்டதால் தாங்கள் வந்த டியூக் பைக்கில் தப்பிசென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments