அடிபம்பில் தண்ணீர் அடிக்கும் போது பால்கனி மேல விழுந்து தலை நசுங்கி பெண் பலி..!
சென்னை புளியந்தோப்பில் வீட்டின் முற்றத்தில் உள்ள அடிபம்பில் தண்ணீர் அடித்துக்கொண்டிருந்த பெண் மீது பால்கனி இடிந்து விழுந்து பலியானார்.
இன்று காலை சாந்தி என்ற பெண் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த போது, வீட்டின் மாடியில் இருந்த கழிவறையின் சுற்றுசுவர் மற்றும் பால்கனி இடிந்து,
அவர் மீது விழுந்துள்ளது.
இடிபாடுகளில் சிக்கி சாந்தி காயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சிற்கு அழைத்தனர்.
2 மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராத நிலையில் சாந்தி பரிதாபமாக உயிரிழந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர்.
Comments