தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!
தமிழகத்தில் இன்று மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பில், தென்மேற்கு வங்க கடல் பகுதியை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் கனமழை நீட்டிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள தமிழக மாவட்டங்கள், எச்சரிக்கையுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்த ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Comments