எரிசக்தி விலை உயர்வு திட்டமிடப்படாத விளைவுகளுக்கு வழிவகுக்கிறது - ஹர்தீப் சிங் பூரி
எரிசக்தி விலை உயர்வு, உலகளாவிய மந்தநிலை மற்றும் திட்டமிடப்படாத விளைவுகளுக்கு வழிவகுப்பதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற சர்வதேச பெட்ரோலிய கண்காட்சி மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட அவர், ஒபெக் அமைப்பின் நிர்வாகியை சந்தித்துப் பேசினார்.
கடந்த ஆண்டு ஒபெக் அமைப்பின் ஹைட்ரோகார்பன் உற்பத்தியில் 14 சதவீதத்தை இந்தியா பயன்படுத்தியதாக தெரிவித்தார். அமெரிக்காவுடனான எரிசக்தி வர்த்தகம் கடந்த 4 ஆண்டுகளில் 1300 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Comments