"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... டிஸ்னிலேண்டில் சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித்தவிப்பு
சீனாவின் பல நகரங்களில் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஷாங்காய் டிஸ்னிலேண்டில் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாத வகையில் சிக்கியுள்ளனர்.
தொற்று பரவல் காரணமாக ஷாங்காய் டிஸ்னி லேண்ட் பொழுது போக்கு பூங்கா தற்காலிகமாக குறைக்கப்பட்ட பணியாளர்களுடன் செயல்படும் என்றும், கோவிட் பரிசோதனை மேற்கொண்டு தொற்று பாதிப்பில்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் சுற்றுலாப் பயணிகள் வெளியேற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஜெங்ஜோ நகரத்தில் லாக்டவுனுக்கு பயந்த ஐபோன் தயாரிப்பு ஆலை ஊழியர்கள், தொழிற்சாலை வேலியை தாண்டி குதித்து சொந்த ஊர்களுக்கு தப்பிச்சென்ற வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.
Comments