தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..!

0 7561

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், டெல்டா மாவட்டங்கள் உட்பட 17 மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று  கணித்துள்ளது.

நாளையும் தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுத்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments