துணிக்கடை உரிமையாளரிடம் மாமுல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி சுரேஷ் கைது..!
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், துணிக்கடை உரிமையாளரிடம் மாமுல் கேட்டு மிரட்டியதாக ரவுடி கல்லறை சுரேஷையும், அவனது கூட்டாளிகள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
ரமேஷ் என்பவர் MC சாலையில் 12 ஆண்டுகளாக துணிக்கடை நடத்திவருகிறார்.
இந்நிலையில், கூட்டாளிகள் 4 பேருடன் துணிக்கடைக்கு வந்த கல்லறை சுரேஷ், மாதம் 20,000 ரூபாய் மாமூல் தரும்படி மிரட்டியதாகவும், பணம் தர மறுத்தால் உயிரோடு எரித்துவிடுவதாக மிரட்டியதாகவும், சிசிடிவி ஆதாரங்களுடன் போலீசில் ரமேஷ் புகாரளித்திருந்தார்.
Comments