கதவில் பிங்க் நிற பெயிண்ட் - ரூ.19 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை..!
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில், வீட்டின் கதவில் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்ததற்காக, ஒரு பெண்ணுக்கு இந்திய மதிப்பில் சுமார் 19 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிராண்டா டிக்சன் என்ற பெண் தனது வீட்டை புதுப்பித்து பிங்க் நிறத்தில் கதவில் பெயிண்ட் அடித்துள்ளார்.
எடின்பர்க் நகராட்சி கவுன்சில் விதிகளின் படி, வீட்டின் முன்பக்க கதவு மங்கலான நிறத்திலேயே இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ஆனால், இவர் பிங்க் நிறத்தில் பெயிண்ட் அடித்ததால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ள எடின்பர்க் நகராட்சி கவுன்சில், கதவுக்கு மங்கலான வெள்ளை வண்ணம் தீட்ட உத்தரவிட்டுள்ளது.
Comments