கார்-இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து..!

0 3751

கேரள மாநிலம் கண்ணூர் அருகே காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த 2 பேர் அந்தரத்தில் பல்டி அடித்து சாலையில் விழுந்த பதறவைக்கு காட்சி வெளியாகி உள்ளது.

தாவரம் பகுதியில் இருந்து துணை சாலைக்கு செல்வதற்காக முக்கியச் சாலையில் வேகமாக சென்று கொண்டிருந்த கார் ஒன்று வலது புறமாக திரும்பியது. அப்போது எதிர் திசையில் இருந்து வேகமாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த இளைஞர் மீது கார் மோதி விபத்துள்ளானது.

இவ்விபத்தில் இருசக்கர வாகனம் பல துண்டுகளாக உடைந்ததோடு அதிலிருந்த 2 பேர் அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments